FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

வடக்கன் வெளியீடு ஒத்திவைப்பு: தலைப்பு காரணமா?

வடக்கன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர்.

Updated On : 22 மே 2024, 8:29 pm IST
பகிர்:

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.

புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வடக்கன் திரைப்படம் வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையப்படுத்திய எடுக்கப்பட்ட ‘வடக்கன்’ திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் வேதியப்பன் எம். முனுசாமி தனது முகநூல் பக்கத்தில், "வரும் வெள்ளிக்கிழமை (24/05/24) அன்று திரைக்கு வர இருந்த `வடக்கன்’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments