திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் படிக்க...
திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும் படிக்க...
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் படிக்க...
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார். மேலும் படிக்க..
பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட்ட நெரிசல்கள் நேரிடுகின்றன என்று கூறியுள்ளார். மேலும் படிக்க..
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ராஜிநாமா செய்வார்களா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
முழு ஏற்பாடு செய்யாமல் அவசர அவசரமாக வெற்றி விழாவுக்கு அனுமதி கொடுத்ததால்தான் 11 பேர் பலியாகியுள்ளனர். அல்லு அர்ஜுனை கைது செய்ததுபோல், அதே கொள்கை மூலம் சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.மேலும் படிக்க...
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்லியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற நிலையில், அங்கிருந்து அன்புமணி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் - அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான், மியான்மர், யேமன் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கியூபா, வெனிசுலா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
உட்கட்சி பூசலுக்கு மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில், தைலாபுரம் இல்லத்துக்கு சென்ற அன்புமணி, ராமதாஸுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அவரை கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படவேண்டும் என அறிவித்திருந்தார்.
மேலும், அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிய நிலையில், நான்தான் கட்சியின் தலைவர் என்றும், நிர்வாகிகளை நீக்க தனக்கே உரிமை இருப்பதாகவும் அன்புமணி அறிவித்திருந்தார். மேலும் படிக்க...
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
’நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விராட் கோலி, “சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
உடுமலைபேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளரின் மகள் காமாட்சி தேவி (வயது 27) என்பவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்சிபி வீரர்களை காணும் ஆர்வத்தில் மைதானத்துக்கு சென்ற காமாட்சி, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.