FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறக்கை இல்லாத மின்விசிறிகள்.. ஏசி போல ஸ்டைலாக! விலையோ?

இறக்கை இல்லாத அழகிய மின்விசிறிகள் விற்பனைக்கு வந்துள்ளன.

13 அக்டோபர் 2026, 5:42 pm IST
இறக்கை இல்லாத மின்விசிறிகள்
பகிர்:

வீடுகளில் எப்போதும் மூன்று அல்லது நான்கு இறக்கைகளுடன் சப்தமாக சுற்றிக் கொண்டிருக்கும் மின் விசிறிகளுக்கு மாற்றாக இறக்கை இல்லாத அழகிய மின் விசிறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இப்போது பண்டிகை காலம் என்பதால், அமேஸான் போன்ற மின் வணிக இணையதளங்களில் பல வகைகளில் பல விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

இது பார்க்க மின் விசிறி போல இருக்காது. மாறாக ஏசி போல இருக்கும். அதில் எல்டிஇ விளக்கும் இருக்கும். பார்க்க தனி அழகுடன் ஆனால் மிகவும் பயனுள்ளதாகவும் வந்திருக்கின்றன இவை.

Advertisement

Advertisement

தளத்தில் இதனை பொருத்திவிட்டால், காற்று வீசுவதை மட்டுமே உணர முடியும். எங்கிருந்து காற்று வருகிறது என்று தேடினால் இரண்டு மெல்லிய கொம்புகள் போன்ற அமைப்பை ஒரு பட்டை தாங்கியிருக்கும். இதனை வர்ணிக்கக் கூட முடியாது. ஒரு ஏசி பெட்டியைப் போல அல்லது சதுர வடிவில் இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அது மட்டுமா? இந்த மின் விசிறிகளுக்கு ரிமோட் கன்ட்ரோல், வண்ண வண்ண நிறத்தில் ஒளிரும் விளக்கு என பல அம்சங்கள் நிறைந்துள்ளன. ஹை ஸ்பீட் சர்குலேஷன் வசதியும் உள்ளதாம்.

இதன் விலை பல்வேறு நிறுவனங்களில் அதன் வகைகளுக்கு ஏற்ப ரூ.16 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரை விற்பனைக்கு வநதுள்ளன. சில இ-வணிக நிறுவனங்கள் சலுகைகளையும் அறிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments