கோப்புப்படம் 
அழகே அழகு

சருமம் பொலிவாக...சாப்பிட வேண்டிய உணவுகள்!

முதிர் வயதிலும் இளமைத் தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் பொதுவானதுதான்.

தினமணி

முதிர் வயதிலும் இளமைத் தோற்றத்துடன் அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் பொதுவானதுதான். அந்தவகையில், உடல்நலத்தைவிட சரும அழகுக்காக மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். 

கோடை வெயில், சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் சரும அழகு கெடுகிறது. எனினும், காரணங்களை அறிந்து தீர்வு காணாமல் செயற்கையான ரசாயனங்கள் நிறைந்த அழகு சாதனப் பொருள்களையே பெரும்பாலான ஆண்களும் பெண்களும் நாடுகின்றனர். 

உடல்நலமும் சரும அழகும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்றும் பலரும் அறிவதில்லை. உடல்நலத்தைக் காக்கும் அதேநேரத்தில் சருமத்திற்கு அழகு சேர்க்கும் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை எடுத்துக்கொண்டாலே போதுமானது. 

பொதுவாக துரித(பாஸ்ட் புட்), பொருந்தா(ஜங்க் புட்) உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். 

அனைத்துவகை காய்கறி, பழங்களை சாப்பிடலாம். 

எனினும் சரும அழகுக்கு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: 

இளநீர் 

ஆரஞ்சு, நெல்லிக்காய் 

பப்பாளி

திராட்சை

பூண்டு

கீரை வகைகள் 

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை

கேரட், பீட்ரூட் 

தக்காளி

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

மீன் 

தயிர் அல்லது மோர் 

இதுதவிர தினமும் சிறிய சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகா் சதுா்த்தி விழா விற்பனைக்கு சிலைகள் தயாா்

பண்ணாரியில் சூதாட்டம்: 21 போ் கைது

702 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

பைக்கில் துப்பட்டா சிக்கி இளம் பெண் உயிரிழப்பு

மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலுக்கு 504 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT