தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் 14)
புனைவுக் கதையாக இருந்தாலும் வாசிக்கும்போது, வாசகர்களுக்கு கற்பனைகள் நிறைந்த புதுவிதமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது.
தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் 14)- தமிழ்வாணன்; பக்.684; ரூ.680; மணிமேகலைப்பிரசுரம், சென்னை - 600 017. ✆ 91764 51934. 044- 2434 2926.
ஹாலிவுட் திரைப்படங்களில் பல நுண்ணறிவு, துப்பறிவு சம்பவங்களை கதாநாயகர்கள் பல சாகசங்கள் செய்து கையாள்வதை நாம் திரைகளில் கண்டு மெய்சிலிர்த்து வியந்து பார்த்திருப்போம். தமிழ்வாணனின் நாவலில் இடம்பெற்றுள்ள ஆறு அழகிகள், கடலில் கண்டெடுத்த புதையல், காலடி ஓசை, முரட்டுப் பெண், பாலைவனத்தில் பத்து நாள்கள் ஆகிய 5 துப்பறியும் மர்ம புனைவுக் கதைகள் பல சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்டுள்ளதால், வாசகர்கள் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது திரைப்படங்களில் வரும் காட்சிகளைப்போல நாம் கற்பனை செய்து கொண்டு கதைகளில் பயணிப்பதுபோல உள்ளது.
ஒவ்வொரு கதையிலும் அசாத்தியமான கற்பனைக்கு எட்டாத திருப்புமுனைகள், குற்றச் சம்பவங்கள், ரகசியங்கள், திடுக்கிடும் திருப்பங்கள், அசாத்தியமான பயண சாகசங்கள், திரில்லர் சம்பவங்கள் ஆகியவற்றை எழுத்தாளர் வடித்துள்ளது வாசகர்களுக்கு பல சுவாரஸ்யமான மற்றும் எதிர்பார்ப்பு மிகுந்த வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது.
Advertisement
Advertisement
ஜேம்ஸ்பாண்ட் வேடங்களில் நாயகர்கள் நிகழ்த்தும் அசாத்தியமான சாகசங்கள் நிறைந்த காட்சிகள் எவ்வாறு நம்மை வியக்க வைக்கிறதோ, அதேபோல தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் நாம் வாசிக்கும்போது அந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
கதைகளில் இடம்பெற்றுள்ள நாயகர்கள், வில்லன்கள், துணை கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ் இலக்கியங்கள், காவியங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அழகிய தமிழ்ப் பெயர்களை நமக்கு நினைவூட்டுகின்றன. புனைவுக் கதையாக இருந்தாலும் வாசிக்கும்போது, வாசகர்களுக்கு கற்பனைகள் நிறைந்த புதுவிதமான வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.