முகப்பு

பாரதியும் கிறிஸ்தவமும்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஹிந்துமத தெய்வங்களை பலவாறு பாடியவர். சக்தி உபாசகராக பராசக்தியை பாடிய பாடல்களும், கண்ணன் பாட்டும், விநாயகர் நான்மணிமாலையும் அவரது பக்தியை பறைசாற்றுவன.

12 வினாடிகள் முன்பு
பாரதியும் கிறிஸ்தவமும்
பகிர்:

பாரதியும் கிறிஸ்தவமும்-ஜோரா, மோசசு மைக்கேல் பாரடே; பக். 116; ரூ.100; கிருபா பதிப்பகம், சென்னை-600 073. ✆ 90031 97577.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஹிந்துமத தெய்வங்களை பலவாறு பாடியவர். சக்தி உபாசகராக பராசக்தியை பாடிய பாடல்களும், கண்ணன் பாட்டும், விநாயகர் நான்மணிமாலையும் அவரது பக்தியை பறைசாற்றுவன.

ஒரு கட்டத்தில், சமய சடங்குகளைக் கடந்து, 'உள்ளும் புறமுமாய் உள்ளதெல்லாம் தானாகும் வெள்ளம் ஒன்று உண்டாம் அதனை தெய்வம் என்பார் வேதியரே' என்று பரசிவ வெள்ளம் பாடியவர். கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன், முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்' ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர் உருவகத்தாலே உணர்ந்து உணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே எனும் கொள்கை உடையவர் பாரதி.

Advertisement

Advertisement

தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் என்று சாடியவர். ஆயினும், அவர் இயேசுவையும் அல்லாவையும் புகழ்ந்து பாடத் தவறவில்லை. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை புரிந்து பாடியவர். அதேவேளையில், வலிந்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களை கண்டிக்கவும் செய்தார்.

கிறிஸ்தவ பாதிரியார்களின் நற்செயல்களை பாராட்டியும், பாரத தேசத்தின் போக்குக்கு எதிராக செயல்படும்போது அவர்களை எதிர்த்தும் பாரதியார் எழுதிய கட்டுரைகளின் பாரபட்சம் இல்லாத, வெளிப்படையான கருத்தாடல்களை இந்த நுôல் பதிவு செய்துள்ளது.

புதுவையில் தனது நண்பர் சுரேந்திரநாத்ஆர்யர் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியதை அறிந்து வருந்தினாலும், ''நீ என்ன செய்வாய்? ஹிந்து சமூகம் இருக்கிற நிலைமை இதற்கு இடம் கொடுக்கிறது. உயிரற்ற ஜனச்சமூகம்'' என்று சாடுகிறார் பாரதியார்.

கிறிஸ்தவ பாதிரிகள் பள்ளிக்கூடங்கள் முதலியன வைப்பது போல நமது குருக்கள், மடாதிபதிகள் ஏன் செய்யவில்லை என்று ஹிந்து மத ஸ்தாபனங்களின் தலைமைகளைக் கேள்வி கேட்டு எழுதியதையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது.

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே- பாடலும், ஊனுடலை வருத்தாதீர் உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்ற பாடல் வரிகளும் பாரதியார் எழுதுவதற்கு காரணம் அவர் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவது புதிய சிந்தனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.