பெரும் மெளனங்கள்
மின்மினிப்பூச்சியைப் பிடித்து பாட்டிலில் அடைத்த சிறுவன், அதை எல்லோருக்கும் காட்டும் சுவாரஸ்யத்துக்கு ஒப்பானதாக இருக்கிறது இந்த 'பெரும் மெளனங்கள்'.
பெரும் மெளனங்கள்-சீனு ராமசாமி; பக். 200; ரூ. 200; வம்சி புக்ஸ், திருவண்ணாமலை-606 601. ✆ 94458 70995.
நூலாசிரியரின் எண்ணற்ற மன அடுக்குகளில் தனித்தனியாக பாதுகாப்பாக சேகரித்து வைத்திருந்த உயிரோட்டமுள்ள நினைவுகளை, அதன் உணர்வு நிலை மாறாமல் அப்படியே பகிர்ந்துள்ளார். இந்தத் தொகுப்பை கட்டுரைகளாகப் பார்ப்பதும், சிறுகதைகளாகப் பார்ப்பதும் வாசகர்களின் விருப்பம். அதுவே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
காதலில் 'ஒப்புக்குச் சப்பாணி; அக்காவை ஆசீர்வதிப்பது; கொள்ளுப் பாட்டி கற்றுக்கொடுத்த பாடத்தால் தயாரிப்பாளரிடம் பங்கை விட்டுக் கொடுத்தது; தாகூரின் கவிதைகள்; ரத்த சொந்தம் இல்லாத உறவுகளின் பரிசுத்த அன்பு; இழந்த காதல்கள்; இப்படி நூலாசிரியர் பகிரும் நிகழ்வுகள் அந்தக் கதாபாத்திரங்களின் பெயர் மாறுதலுடன் பெரும்பாலும் எல்லோரின் வாழ்விலும் நிகழ்திருக்கக்கூடும்.
Advertisement
Advertisement
தொலைந்து போனவை தொலைந்து போனவையாகவே இருக்கட்டும் என்று எண்ணாமல் தொலைந்துபோன அத்தனையிலும் தன்னுடைய தொடர்பை இன்னமும் அப்படியே வைத்திருக்கிறார் நூலாசிரியர். அந்தத் தொடர்பில் நன்றியும், அன்பும், ஏக்கமும் கலந்திருக்கின்றன. அன்பு என்பது பறவை போன்றது; அதன் இஷ்டத்துக்குப் பறக்கவிடாமல், கூண்டில் அடைத்தால் அது செத்துத்தான் போகும் என்கிற பிரெஞ்சுக் கவிஞரின் கூற்றைப் புரிய முடிகிறது.
ஒரு படைப்பாளிக்கு முக்கியமாக இருக்க வேண்டியது சமூகப் பார்வை; அந்த சமூகப் பார்வையின் அடித்தளம் இரக்க குணம். அந்த குணமே அவனை ஒரு புத்தனாக, பித்தனாக இந்தப் பிரபஞ்சத்துடன் பேச வைக்கும். அதுதான் நூலாரிசியருக்கு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
மின்மினிப்பூச்சியைப் பிடித்து பாட்டிலில் அடைத்த சிறுவன், அதை எல்லோருக்கும் காட்டும் சுவாரஸ்யத்துக்கு ஒப்பானதாக இருக்கிறது இந்த 'பெரும் மெளனங்கள்'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.