FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மு. அருணாசலம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

தமிழில் முதன்முதலில் கதைப்பாடல்கள் பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் விரிவாகத் தரப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை மு. அருணாசலம்.

26 அக்டோபர் 2026, 7:11 pm
பகிர்:

மு. அருணாசலம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)- ஜெ. சுடர்விழி; பக்.128; ரூ.100; சாகித்திய அகாதெமி, சென்னை-600 018. ✆ 044 - 2431 1741.

தமிழில் கவனப்படுத்தப்படாமல்போன எத்தனையோ தமிழறிஞர்களில் ஒருவரான மு. அருணாசலம், எட்டு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 50 நூல்களை எழுதியவர்; சுமார் 15 நூல்களைப் பதிப்பித்தவர். மு.அ.வின் தமிழியல் பணிகளில் ஆய்வு மேற்கொண்டவரான ஜெ. சுடர்விழி, இந்த நூலில் அவருடைய வாழ்வையும் பணிகளையும் தனிச் சிறப்புகளையும் பதிவு செய்துள்ளார்.

1940-களிலேயே வாய்மொழிப் பாடல்களைத் தொகுக்கும் முயற்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த இவருடைய 'காற்றிலே மிதந்த கவிதை' வாய்மொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. திருக்காளத்தி தொடங்கி திருக்குற்றாலம்வரை நேரிலும் கற்பனையிலும் அவர் கண்ட காட்சிகளின் விளக்கம் நிழலருமை வெய்யிலிலே. இயற்கை வரலாற்று நூல்களுடன் ஏராளமாகப் புலவர் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார்.

Advertisement

Advertisement

காசி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒரு நாள் பணியைத் துறந்து வார்தா ஆசிரமத்துக்குச் சென்று காந்தியம்சார் ஆதாரக் கல்வி பயின்று பின்னாளில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார்.

ஆதாரக் கல்விக்கென கிராம நிர்மாணத் திட்டம் தொடங்கி, தோட்ட வேலை, நோயற்ற வாழ்வுவரை நூல்களை எழுதியவர்; காந்தியராகவே வாழ்ந்து மறைந்தவர்.

1940-களில் இவர் எழுதி, 'தினமணி' காரியாலயத்தால் வெளியிடப்பட்ட 'இன்றைய தமிழ் வசன நடை'யில் அப்போதைய தமிழ் நடை பற்றிக் கிண்டலும் கேலியுமாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்; இதற்குப் பதிலடியாகப் புதுமைப்பித்தனும் தொ.மு.சி.யும் எழுதிய வசைப் பாடல் வரலாறும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் முதன்முதலில் கதைப்பாடல்கள் பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்தும் விரிவாகத் தரப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை மு. அருணாசலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments