FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.17 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.17 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.17 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றனர். 
அதன்படி சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் மொத்தம் ரூ.3.17 கோடி வசூலானது. 
ரூ.8.25 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.8.25 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments