FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பதி: விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் கோட்டா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) மதியம் வெளியிடப்பட உள்ளது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் கோட்டா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) மதியம் வெளியிடப்பட உள்ளது.
ஏழுமலையானை அனைத்து பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவை அறிமுகப்படுத்தியது. ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 28 ஆயிரம் டிக்கெட்டுகள் வரையில் தேவஸ்தானம் அளித்து வருகிறது.
90 நாள்களுக்கு முன்பாக பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தங்களின் வசதிக்கேற்ற நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 
இந்நிலையில், திருமலையில், செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அதனால் அந்நாள்களில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். 
அதனால் செப்டம்பர் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் கோட்டாவை செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இதை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments