FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப்பலன்கள் - 2024 

எண்ணியது இனிதாய் நடக்கப்போகும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

Updated On : 16 டிசம்பர் 2023, 12:34 pm IST
பகிர்:

எண்ணியது இனிதாய் நடக்கப்போகும் 2024 ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சோபக்ருத் வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2024,திங்கள் கிழமையும் க்ருஷ்ணபக்ஷ பஞ்சமியும் மகம் நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் கௌலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

மகம் நக்ஷத்ரம் சிம்ம ராசி கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சீரும் சிறப்புடனும் - ஆயுசுடனும் - ஆரோக்கியத்துடனும் - அனைத்து விதமான ஷேமங்கள் பெறவும் - திருமணம் கைகூடி வரவும் - சந்தாண பாக்கியம் கிட்டவும் - நல்ல வேலை கிடைக்கவும் - வெளிநாடு பயணம் இனிதே பெறவும் - வீடு மனை வாகனம் அமையவும் ஆண்டின் தொடக்க நாளில் இறைவனை திருக்கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது நல்லது.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு சிவனுக்கும் விநாயகருக்கும் உகந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாக்கும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் - காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் - எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் தைரிய ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனுக்கு உகந்த தேவதையான ஸ்ரீமன் நாராயணனையும் - மகம் நக்ஷத்ரத்திற்கு உகந்த தேவதையான விநாயகரையும் வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். புத்தாண்டின் கிரகநிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவக்கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷங்களை அள்ளித்தரும் கிரக அமைப்பில் இருப்பது நன்மையே. 

கிரகநிலை

லக்னம் கன்னி - தைரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்களுடைய உலா இருக்கிறது. 

சனியின் ஆதிக்கம் பெற்ற எண்: 2024: இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 4 = 8. எட்டு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்க்கைக்கும் வாராகி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் சுயசாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் பஞ்சம ரண ருணாதிபதி சனியும் கேந்திரம் பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி ரண ருண ரோக ஸ்தானத்தில் தைரிய அஷ்டமாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். 

பொதுப் பலன்கள்

தொழில் வளர்ச்சி அடையும். பங்குச்சந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் மெல்ல மெல்லச் சரியாகும். இந்த ஆண்டு நடைபெறும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாகும். அதிகமான  கோவில்களுக்கு புனரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும். அரசாங்கம் ரீதியாக பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்னைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும். 

கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துத்துறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயனம் - ஆன்மீகம் - ஜோதிடம் - வழக்குரைஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் ஆட்சியாக இருப்பதால் கலைத்துறை செழிக்கும். கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். 

மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். காட்டில் நெருப்பால் அழிவு ஏற்படலாம். 

அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையைக் கணித்துக் கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராகப் பேசும் நபர்கள் அதிகமாவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments