FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்

வெளிநாட்டிலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரப்போகுது மீன ராசியினருக்கு..  

Updated On : 13 ஜனவரி 2023, 6:17 pm IST
பகிர்:

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அலைந்து திரிந்து செய்த காரியங்களை சரியாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சேமிக்கும் பணத்தை  சுப காரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்திலும் இருந்த குறைகள் மறைந்து பொலிவுடன் காணப்படுவீர்கள்.

வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். வங்கிக் கடன்களும் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்கி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

Advertisement

Advertisement

நண்பர்கள் தானாகவே வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.  மேலும் விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வருவார்கள். பேச்சிலும் செயலாற்றும் திறமையாலும் உங்களின் அறிவு முதிர்ச்சி வெளிப்படும்.

ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அனைவரும் உங்களை அனுசரித்து செல்வார்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்து முடிப்பீர்கள். அரசு வழியிலும் ஆதரவு பெருகும். மற்றபடி உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள்:  விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும்.  சக ஊழியர்களுடன் சுமுகமான உறவு நிலை தொடருவதால், உங்களின் வேலைகள் குறித்த காலத்துக்குள் நிறைவேறிவிடும்.  உங்களின் சமயோஜித புத்தியில் தேவையில்லாத பிரச்னைகளில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகள்: கொடுக்கல் - வாங்கலில் கணக்கு விஷயங்களில் சரிபார்த்து நடந்துகொள்ளவும். அதேநேரம் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம்.  கூட்டுத் தொழில் புரிவோர் நண்பர்களிடம் உஷாராக நடந்து கொள்ளவும். 

விவசாயிகள்: புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன்களும் வந்து சேரும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலிடத்தின் ஆதரவுடன் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். எவரிடமும்  ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  அதே நேரம் தொண்டர்களின் வட்டாரங்களில் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ளவும்.

கலைத்துறையினர்: உங்கள் திறமைகளை ஒன்று சேர கூட்டிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது பிற்கால முன்னேற்றத்துக்கு உதவும். மனச்சோர்வடையாமல் இருக்க தியானம், ப்ராணாயாமம் போன்றவற்றை செய்யுங்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள்.

பெண்கள்: குடும்பத்தில் சற்றே குழப்பங்கள் உண்டாகி பின்பு மறையும். உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். சுய நம்பிக்கையுடன் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மழலைச் செல்வங்களின் வரவால் மகிழ்ச்சி பெருகும்.

மாணவர்கள்: கேளிக்கைகளிலும் விளையாட்டிலும் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும்.    சுற்றுலா அழைத்துச் சென்று உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வார்கள். படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள்.  உங்கள் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

பரிகாரம்: ஸ்ரீ ஐயப்பனை வழிபடவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments