FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவையாறு காவிரி ஆற்றில் கடைமுழுக்கு! ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்!

கடைமுழுக்கு தினத்தில் திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல் பற்றி..

திருவையாறு
பகிர்:

ஐப்பசி மாதம் துலா மாதம் என அழைக்கப்படுகிறது. இம்மாதத்தின் முதல் நாளில் தொடங்கி கடைசி நாளான 30-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் புனித நீராடுவது துலா ஸ்நானம் எனப்படுகிறது. அந்த வகையில், ஐப்பசி மாதத்தின் முதல் நாளிலிருந்து திருவையாறு காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுழுக்கு தினத்தில், ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்மன் உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்குவது சிறப்புக்குரியதாகும். இதனை முன்னிட்டு, இன்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவையாறு காவிரி ஆற்றுக்கு வருகை தந்து புனித நீராடி, இறைவனை வழிபட்டனர்.

Advertisement

Advertisement

மேலும், பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பண்டாரங்கள் பக்தர்களுக்கு விபூதி பட்டை மற்றும் நாமம் இட்டு ஆசி வழங்கினர்.

கடைமுழுக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.