கடகத்திலிருந்து சிம்மத்துக்கு அதிசாரப் பெயர்ச்சி அடைந்தார் குரு பகவான்! அதிர்ஷ்டம் யாருக்கு?
85 நாள்களுக்கு அதிர்ஷ்டம் தரும் குரு பகவானின் அதிசாரப் பயணம் பற்றி..
குரு அதிசார பெயர்ச்சியின்படி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு இன்று பெயர்ச்சியானார்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் சுபக்கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவான இவர், பொதுவாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர ஓராண்டுக் காலம் எடுத்துக்கொள்வார். ஆனால், சில காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிசார நிலையில் பயணிப்பதும் உண்டு.
அதிசாரத்தில் பெயர்ச்சியான குரு பகவான்
அதன்படி, இந்தாண்டு குரு பகவான் ஆட்சி செய்துவந்த கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியான குருபகவான் சுமார் 85 நாள்கள் அதாவது இன்று (அக்.31) முதல் 2027 ஜனவரி 24 தை மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 1.32 வரை குரு பகவான் சிம்ம ராசியில் அதிசாரமாகப் பயணித்துவிட்டு அதற்குப்பின் வக்ர கதியில் கடக ராசிக்குத் திரும்புகிறார்.
Advertisement
Advertisement
குரு அதிசார பெயர்ச்சி என்றால் என்ன?
ஜோதிடத்தில் குரு பகவான் தனது இயல்பான வேகத்தை விட வேகமாக நகர்ந்து ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு முன்னரே செல்வதை அதிசார பெயர்ச்சி என்கிறோம். அவ்வாறு அதிசாரமாக இயங்கும்போது, ஒரேயாண்டில் இரண்டு முறை ராசி மாற்றம் நிகழ்வுகளும் நடைபெறும்.
குருவின் காரகத்துவம்
குரு பகவான் ஞானம், கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உரியவர்.
மாற்றங்களும், திருப்பங்களும்..
இந்த அதிசாரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் உரிய பலன்கள், மாற்றங்கள், திருப்பங்கள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்த ஐந்து ராசிகள் குருவின் அதிசார பெயர்ச்சியால் யோக பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குரு அதிசார பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்
இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 85 நாள்களுக்குச் சுப காலங்களாகும். திருமணம், தொழில், வேலை, குழந்தைப்பேறு, வீடு, வாகனம், பொருளாதாரம் மற்றும் தடைப்பட்ட காரியங்கள் போன்றவை அவரவர் சுய ஜாதகத்தில் நடப்பு தசா புத்தியின் பலம், பலவீனத்தைப் பொருத்து அதன் அடிப்படையில் நற்பலன்கள் உண்டாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.