FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சூரிய தாகம் !  கவிஞர் இரா .இரவி

6 ஆகஸ்ட் 2025, 5:50 pm IST
பகிர்:

இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு 
இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் !

காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள் 
கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் !

சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும் 
சின்னப்  புத்திக்காரர்கள் ஒழிய வேண்டும் !

Advertisement

Advertisement

நீதி நேர்மை நியாயம் எங்கும் எப்போதும் 
நிரந்தரமாக மக்களிடையே நிலவ வேண்டும் !

நாடு முழுவதும் மதுக்கடைகளும் ஆலைகளும்
நிரந்தரமாக உடனடியாக மூடிவிட வேண்டும் !

வெண்சுருட்டு உற்பத்திக்குத்  தடை  வேண்டும்
வெண்சுருட்டு கிடைக்காத நிலை வேண்டும் !

ஆணாதிக்க சிந்தனை அடியோடு அழிய வேண்டும் 
ஆணிற்கு நிகர் பெண் என்பதை உணர வேண்டும் !

இலஞ்சம் உள்ள நாட்டில் இல்லாது ஒழிய வேண்டும் 
இலட்சிய தாகத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும் !

ஒழுக்கம் உயிர்க்கு மேலாக மதித்திட வேண்டும் 
ஒழுக்கக்கேடு எங்கும் இல்லாமல் ஒழிய வேண்டும் !

சாதி சமய வேற்றுமைகள் இல்லாது ஒழிய வேண்டும் 
சகோதர உணர்வுடன்  சங்கமிக்க வேண்டும் !

மூட நம்பிக்கை நாட்டில் முற்றாக ஒழிய வேண்டும் 
மூளையைப் பகுத்தறிவிற்கும் பயன்படுத்த வேண்டும் !

கல்வித்துறை முழுவதும் அரசுடைமையாக வேண்டும் 
கல்வித்துறையில் தனியாரை அகற்றிட வேண்டும் !

அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்திட வேண்டும் 
அனைவருக்கும் கல்வியை அரசே வழங்கிட வேண்டும் !

ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை வர வேண்டும் 
எல்லாமும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும்  !

உழைப்பை அனைவருக்கும்  உறுதி செய்ய வேண்டும் 
உழைக்காதோர் இல்லை என்ற நிலை வர வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments