மாநில சப்ஜூனியர் எறிபந்து:திருச்சி, சென்னை அணிகள் வெற்றி
திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய மாநில சப் ஜூனியர் எறிபந்து போட்டி லீக் ஆட்டங்களில் திருச்சி, சென்னை, கரூர், கோவை அணிகள் வெற்றி பெற்றன.
திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய மாநில சப் ஜூனியர் எறிபந்து போட்டி லீக் ஆட்டங்களில் திருச்சி, சென்னை, கரூர், கோவை அணிகள் வெற்றி பெற்றன.
திருச்சி ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கிய இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 முதல் 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளைக் கொண்டு லீக் மற்றும் நாக் -அவுட் முறையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் போட்டியில், மாணவர்கள் பிரிவில் திருச்சி மாவட்ட அணி 15- 7, 15- 4 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வென்றது.
Advertisement
Advertisement
சென்னை அணி 15- 8, 15- 0 என்ற புள்ளிகள் கணக்கில் புதுக்கோட்டை அணியை வென்றது. கரூர் மாவட்ட அணி 15- 6, 15- 6 என்ற புள்ளிகள் கணக்கில் பெரம்பலூர் மாவட்ட அணியை வென்றது.
கோவை மாவட்ட அணி 17- 15, 15- 8 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரோடு மாவட்ட அணியை வென்றது.
மாணவிகள் பிரிவு...
மாணவிகள் பிரிவில் சென்னை மாவட்ட அணி 15- 2, 15- 0, என்ற புள்ளிகள் கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை வென்றது. காஞ்சிபுரம் மாவட்ட அணி 15- 2, 15-1 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணியை வென்றது. திருநெல்வேலி மாவட்ட அணி 15-1, 15-1 என்ற புள்ளிகள் கணக்கில் தேனி மாவட்ட அணியை வென்றது.
திருவள்ளூர் மாவட்ட அணி 15- 1, 15- 1 என்ற புள்ளிகள் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வென்றது.
முன்னதாக, திருச்சி மறை மாவட்ட பேராயர் அந்தோணி டிவோட்டா போட்டிகளைத் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு எறி பந்து கழகப் பொதுச் செயலாளர் டி. பாலவிநாயகம் மற்றும் மாவட்ட எறி பந்து கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.