விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டி: சாம் கரண் ஆட்ட நாயகன்

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். 

முதல் ஒருநாள் போடியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

மழையின் காரணமாக போட்டி 29 ஓவர்களுக்கானதாக மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 201 ரன்களை எடுத்தது. இதில் பேர்ஸ்டோ 28, லிவிங்ஸ்டன் 38, சாம் கர்ரன் 35 ரன்களும் எடுத்தனர். சாம் கரண் 18 பந்தில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

மலான், வாண்டர்டூசன், மார்கரம் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கலேசம் மட்டும் 33 ரன்களை எடுத்தார். மில்லர் 12, பிரிட்டோரியஸ் 17 ரன்களும் எடுத்தனர். ஆடில் ரசித் 3 விக்கெட்டுகள், டாப்ளே, மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளையும் சாம் கரண் 1 விக்கெட்டையும் எடுத்தார். 

சிறந்த ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்காக சாம் கரண் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். 

3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அதில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களே தொடரினை வெல்வர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT