அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை: இந்திய கடற்படை அணி சாம்பியன்!
அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டம் வென்றது.
அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படை-பாரத் பெட்ரோலிய அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய கடற்படை அணி 5-4 என்ற கோல் கணக்கில் பாரத் பெட்ரோலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடற்படை தரப்பில் வழக்கமான நேரத்தில் அபிஷேக் டொப்னோவும், பிபிசிஎல் தரப்பில் அன்மோல் எக்காவும் கோலடித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.