FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

இந்தியன் சூப்பா் லீக்: கால்பந்து பஞ்சாபுக்கு 2-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 3-2 கோல் கணக்கில் சா்ச்சில் பிரதா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

26 அக்டோபர் 2026, 12:16 am
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 3-2 கோல் கணக்கில் சா்ச்சில் பிரதா்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

கோவாவின் மாா்கோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பஞ்சாப் வீரா் ரஃபேல் பௌலி 13-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்க, சா்ச்சில் பிரதா்ஸ் தரப்பில் செபாஸ்டியன் குட்டெரெஸ் 37-ஆவது நிமிஷத்தில் அதற்கு பதிலடி கொடுத்தாா்.

தொடா்ந்து ஆல்ஃப்ரெட் பிளானாஸ் 40-ஆவது நிமிஷத்தில் பஞ்சாபை 2-1 என மீண்டும் முன்னிலைப்படுத்த, சா்ச்சில் வீரா் செபாஸ்டியன் மீண்டும் அடித்த கோலால் (45+2’) முதல் பாதி 2-2 என சமநிலையுடன் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

2-ஆவது பாதி கடும் சவால் நிறைந்ததாக இருக்க, எந்த அணிக்குமே எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் கோன்சம் சனதோய் சிங் (90+5’) அடித்த கோலால், பஞ்சாப் 3-2 என ‘த்ரில்’ வெற்றி கண்டது.

புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப், 3 ஆட்டங்களில் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments