கிரிக்கெட்

பல நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்; ஷிகர் தவானுக்கு விராட் கோலி வாழ்த்து!

மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்தற்கு நன்றி என ஷிகர் தவானுக்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்தற்கு நன்றி என ஷிகர் தவானுக்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த அவருக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வந்தனர்.

இந்த நிலையில், மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்தற்கு நன்றி என ஷிகர் தவானுக்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோலி அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அறிமுகப் போட்டியில் அச்சமின்றி விளையாடியது முதல் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக மாறியது வரை எங்களுக்கு பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்.

போட்டியில் உங்களது அர்ப்பணிப்பு, உங்களுக்கே உரித்தான புன்னகையை கண்டிப்பாக மிஸ் செய்வோம். ஆனால், உங்களது சிறப்பான ஆட்டங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து நிலைத்து நிற்கும். மனதில் நீங்கா இடம்பிடிக்கும் விதமான பல நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக ஷிகர் தவான் 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT