முகப்பு
கிரிக்கெட்

முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 22 டிசம்பர், 2024 at 12:11 PM
ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 22) வதோதராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

ஸ்மிருதி மந்தனா அசத்தல்

முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அசத்தலான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 34 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.