சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள், பெண்களுக்கு சமமான பரிசுத்தொகை: ஐசிசி அறிவிப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.

பெண்களுக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிகள் முதல் ஆண்கள் உலகக் கோப்பையில் வழங்கப்படும் அதே அளவிலான பரிசுத்தொகையை பெண்களுக்கும் வழங்கவுள்ளதாக இன்று ஐசிசி அறிவித்துள்ளது.

இதன் மூலம், பெண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிக்கு ஏறத்தாழ ரூ. 20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023-ல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று ஏறத்தாழ ரூ.8.3 கோடி பரிசுத்தொகையாக பெற்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை அதைவிட 134 சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்று வாங்கிய பரிசுத்தொகை ஏறத்தாழ ரூ. 20.5 கோடியாகும்.

”ஆண் விளையாட்டு வீரர்கள் பெறும் அதே அளவிலான பரிசுத் தொகையைப் பெண்களும் பெறவிருக்கும் முதல் போட்டியாக ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை 2024 இருக்கப்போகிறது. இது விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி ஆண்டுதோறும் நடத்தும் மாநாட்டில் ஜூலை 2023-ல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், 2030 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட இருந்தத் திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தியதாகவும் ஐசிசி கூறியுள்ளது.

போட்டியில் இரண்டாவதாக வரும் அணிக்கு ஏறத்தாழ ரூ. 10 கோடி பரிசுத்தொகை வழங்கவுள்ளதாகவும், கடந்த டி20 உலகக்கோப்பையில் இரண்டாவதாக வந்த தென்னாப்ரிக்க அணி ஏறத்தாழ ரூ. 4 கோடி பரிசுத்தொகை பெற்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை அதைவிட 134 சதவீதம் அதிகமாகும்.

அரை இறுதிகளில் தோற்கும் இரு அணிகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ ரூ. 5.6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் (கடந்த 2023-ல் ஏறத்தாழ ரூ. 1.75 கோடி பரிசுத்தொகை), மொத்த போட்டிகளின் பரிசுத்தொகை ஏறத்தாழ ரூ. 66 கோடி வரை வழங்கப்படவுள்ளதாகவும், இது கடந்த உலகக்கோப்பையை விட 225 சதவீதம் அதிகமென்றும் கூறப்படுகிறது.

அதேபோல, அரை இறுதிக்கு தகுதிபெறாத அணிகளுக்கும், தொடக்க நிலைப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கும் முறையே தனித்தனியாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

ஐசிசியின் இந்த நடவடிக்கை பெண்கள் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், 2032 ஆம் ஆண்டுக்குள் இதனை விரிவுபடுத்தும் நோக்கிலும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT