முகப்பு
கிரிக்கெட்

46 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.

Updated On : 4 ஜனவரி 2025, 1:07 pm IST
ஜஸ்பிரீத் பும்ரா. - படம்: ஏபி
பகிர்:

இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்து பந்துவீசுவதில் சிரமம் என ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்றார்.

இந்த 2 விக்கெட்டுகளுடன் இந்தத் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா தொடரில் ஒரு இந்தியரின் அதிகபட்ச விக்கெட்டுகள் 31ஆக இருந்தது. அதை பிஷன் பேடி 1977-78 தொடரில் எடுத்திருந்தார்.

தற்போது, 46 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ரா அதை முறியடித்துள்ளார்.

ஸ்கேன் எடுக்க சென்ற பும்ரா மீண்டும் ஓய்வறைக்கு திரும்பினார்.

இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த மௌரிஸ் டாடே 38 விக்கெட்டுகள் (1924) உடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் பும்ரா 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் ஆஸி.யில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற உலக சாதனை நிகழ வாய்ப்பிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments