கருண் நாயர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் இருக்கிறது: கருண் நாயர்

இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய கருண் நாயர், விஜய் ஹசாரே டிராபியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். இதுவரை அவர் 5 சதங்களை விளாசியுள்ளார். விதர்பா அணிக்காக நடப்பு விஜய் ஹசாரே தொடரில் 756 ரன்களை 756 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடும் கனவு

விஜய் ஹசாரே தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயர், இந்திய அணிக்காக விளையாடும் எண்ணம் இன்னும் தனக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: அன்பான கிரிக்கெட்டே, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எப்போதும் எனக்குள் இருக்கிறது. ஆமாம், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இன்னும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரே இலக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாடவுள்ளது. அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், கருண் நாயர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கருண் நாயரை அணியில் தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT