முதல் டி20: இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ்குமார் ரெட்டி, அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
நியூசிலாந்து அணி:
பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜாஸ் பட்லர், ஹாரி புரூக், லியம் லிவிங்ஸ்டன், ஜாகோப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்ஸன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆடில் ரஷித், மார்க் வுட்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி இந்தியாவுடன் விளையாடவிருக்கிறது.
அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட விருக்கிறது. நியூசி. உடனான தொடர், பிஜிடி தொடர் என தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பிஜிடி தொடரில் அசத்திய நிதீஷ் ரெட்டி டி20யில் களமிறங்கியுள்ளார்.
முகமது ஷமி விளையாடுவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விளையாடவில்லை. 3 சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.