திலக் வர்மா படம் | AP
கிரிக்கெட்

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 55 பந்துகளில் 72 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்?

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்து அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாடினால், மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும். அதனால், வீரர்கள் மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். நான் அதிரடியாக விளையாடுவது மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நான் விளையாடிய ஷாட்டுகள் அனைத்தும் வலைப்பயிற்சியின்போது பயிற்சி செய்தவையே. அவருக்கு எதிராக எந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்பதற்கு தயாராக இருந்தேன். அதனால், எனக்கு சிறந்த முடிவுகள் கிடைத்தன என்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 60 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT