சதம் விளாசிய மகிழ்ச்சியில் கீஸி கார்ட்டி படம் | ஐசிசி
கிரிக்கெட்

2-வது ஒருநாள்: சதம் விளாசிய கீஸி கார்ட்டி; இங்கிலாந்துக்கு 309 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

சதம் விளாசிய கீஸி கார்ட்டி

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.4 அணி ஓவர்களில் 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கீஸி கார்ட்டி சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பிரண்டன் கிங் (59 ரன்கள்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (22 ரன்கள்) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாக்யூப் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஜேக்கோப் பெத்தேல் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

பள்ளிப்பட்டு ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

SCROLL FOR NEXT