ஆஸ்திரேலிய அணி வீரர்கள் படம் | AP
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

இந்த நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய முதன்மை செயல் அதிகாரி டோட் கிரீன்பர்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிக அளவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை நடத்தி வருகின்றன. வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து தொடர்களை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

பிக் பாஷ் கிரிக்கெட் தொடருக்கு நிறைய தரமான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதற்கு அவர்களுக்கு நேரம் அனுமதித்தால், கண்டிப்பாக வரவேற்கப்படுகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி

கன்னியாகுமரி பள்ளியில் இன்று சாதனைக் குழந்தைகளுக்கு விருது வழங்கும் விழா

அம்பையில் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

நேரு நா்ஸிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT