ககிசோ ரபாடா படம் | AP
கிரிக்கெட்

ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூன் 11) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

திட்டங்கள் உள்ளன

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களிடம் திட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியதாவது: போட்டி முற்றிலுமாக நடுநிலையான இடத்தில் நடைபெறுகிறது. அதனால், முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஆனால், உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக இந்த மாதிரியான சூழல்களில் விளையாடும்போது, அவர்களின் விக்கெட்டினை கைப்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு பேட்டருக்கு எதிராக பந்துவீசும்போதும், அவரது விக்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்பதே பந்துவீச்சாளர் ஒருவரின் எண்ணமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை விளையாடிய போட்டிகளில் பேட்டர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டுள்ளதாக நினைக்கிறேன். எங்களிடம் ஒவ்வொரு பேட்டருக்கு எதிராகவும் தனித்தனி திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், மிகுந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் ஆட்டத்தினை எளிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT