இந்தியா - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ளது.
248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ. அணி, இந்தியாவை விட 270 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியா - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் 518/5 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா சார்பில் குல்தீப் 5, ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
ஃபாலோ ஆனை தவிர்க்க முடியாமல் தற்போது, மே.இ.தீ. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.