முகப்பு
கிரிக்கெட்

மழை நின்றது: பாகிஸ்தான் வெற்றிபெற 113 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் உலகக் கோப்பை போட்டி பற்றி...

Updated On : 15 அக்டோபர், 2025 at 4:07 PM
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர்.
பகிர்:

மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது. பின்னர், மழை நின்றதால் போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

பின்னர், இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 133/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சார்லி டீன் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் கேப்டன் ஃபாதிமா சனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியின் போட்டி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கியது.

25 ஓவர்களில் இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியதுபோது மழை குறுக்கிட்டது.

டிஎல்எஸ் விதியின்படி பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவர்களில் 113 ரன்கள் இலாக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் 6 ஓவர்களில் 34/0 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

summary

Rain interrupted the England-Pakistan match in the Women's World Cup. The match was later reduced to 31 overs after the rain stopped.

முழு கட்டுரையைப் படிக்க →