மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (அக். 22) மோதுகின்றன.
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது முதல், இதுவரை தோல்வியே சந்திக்காமல் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், வெற்றி பெறும் அணியானது தென்னாப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலிசா ஹீலிக்கு ஏற்பட்டுள்ள காயத்தால், இன்றைய போட்டிக்கு தஹ்லியா மெக்ராத் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அடிலெய்டில் தோல்வியே தழுவாத இந்தியா! ஆஸ்திரேலியாவை நாளை வெல்லுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.