பிபிஎல் சேலஞ்சர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி டாஸ் வென்று, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்செஸ் அணியுடன் வரும் ஞாயிற்றுக் கிழமை மோதவிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் 15-ஆவது சீசன் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சேலஞ்சர் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர் அணியும் ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி மோதுகின்றன.
சிட்னி சிக்ஸர்ஸ் அணி குவாலிஃபயரில் தோற்று, சேலஞ்சர் சுற்றுக்குக் கீழிறங்கியது.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் மோசமாக விளையாடிய பாபர் அசாம் தனது நாட்டுக்குத் திரும்பியதால் அவருடைய இடத்தில் டேனியல் ஹுக்ஸ் விளையாடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.