FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்களை அறிவித்த இங்கிலாந்து அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜேக்கப் பெத்தேல்
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (நவம்பர் 13) பெர்த்தில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஷ் டங்குக்குப் பதிலாக மாற்று வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஷ் டங் இருவருக்கும் மாற்று வீரர்களாக ஜேம்ஸ் கோல்ஸ் மற்றும் எடி ஜாக் ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஹென்றி க்ரோகோம்ப், சாம் கரண், லியம் டாஸன், பென் டக்கெட், எடி ஜாக், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட்.

summary

The replacements for Jacob Bethel and Josh Tongue , who have been ruled out of the ODI series against Australia due to injury, have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.