மாட் ஹென்றி 6 விக்கெட்டுகள்..! 89 ரன்களுக்கு சுருண்ட இந்தியா; நியூசிலாந்து அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து குறித்து...
இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 125 ரன்கள் குவித்தார்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார்.
மூவர் (இஷான், அக்ஷர், நமன் திர்) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடித்தார்கள். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஷ் ஐயர் ஒரே ஓவரில் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார்கள். நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி நவ.15ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. தொடரை இந்தியா வெல்லுமா அல்லது நியூசிலாந்து சமன்செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.