FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையும் ஹர்ஷல் படேல்!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் டிரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையவுள்ளார்.

57 வினாடிகள் முன்பு
ஹர்ஷல் படேல்
பகிர்:

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் டிரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணையவுள்ளார்.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கான மினி ஏலம் கோவாவில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை டிரேடிங் மூலம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

Advertisement

Advertisement

அதன் ஒரு பகுதியாக, ஐபிஎல் தொடரில் இரண்டு முறை பர்பிள் தொப்பியை வென்றவரான ஹர்ஷல் படேல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்படவுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 8 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ. 4 கோடிக்கு டிரேட் செய்யப்படவுள்ளார்.

ஹர்ஷல் படேல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைவது இறுதி செய்யப்பட்டால், அவர் ஐபிஎல் தொடரில் ஐந்து வெவ்வேறு அணிகளுக்கு விளையாடியுள்ள வீரராக மாறுவார். இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஹர்ஷல் படேலுக்கு நன்றாக அமைந்தது. அந்த சீசனில் அவர் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருப்பினும், நடப்பாண்டு ஐபிஎல் சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

கடந்த 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்கள் ஹர்ஷல் படேலுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தன. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 32 விக்கெட்டுகளையும், 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பர்பிள் தொப்பியை வென்று அசத்தினார்.

summary

Indian fast bowler Harshal Patel is set to join the Gujarat Titans via a trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.