மோசமான பேட்டிங்: மகாராஷ்டிர அணியில் இருந்து கேப்டன் ருதுராஜ் நீக்கம்!
சையத் முஷ்டக் அலி தொடரில் இருந்து நீக்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து...

சையத் முஷ்டக் அலி தொடரில் மகாராஷ்டிர அணியில் இருந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அவருக்குப் பதிலாக பிரித்வி ஷா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசன்களாக சுமாராகவே விளையாடி வருகிறார். அதேபோல் உள்ளூர் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வருகிறார்.
Advertisement
Advertisement
சையத் முஷ்டக் அலி தொடரில் மகராஷ்டிர அணிக்கு கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தலைமையில் மகாராஷ்டிர அணி இந்த சையத் முஷ்டக் அலி தொடரில் 2 வெற்றி ஒரு தோல்வியடைந்தது. பேட்டராக அவர்3 போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மிகவும் மோசமாக விளையாடியதால் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் மகாராஷ்டிரா 20 ஓவர்களில் 180/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆந்திரா 19.2 ஓவர்களில் 181/3 ரன்கள் எடுத்து வென்றது.
சிஎஸ்கே ரசிகர்கள் இந்தச் செய்தியைப் பகிர்ந்து நமது நிர்வாகம் எப்போது இந்த முடிவை எடுக்குமென கிண்டல் செய்து வருகிறார்கள்.