FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணம் என்ன? பயிற்சியாளர் கூறுவதென்ன?

இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

8 அக்டோபர் 2026, 8:37 pm IST
புவனேஷ்வர் குமார் - படம் | AP
பகிர்:

இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பிடிக்க காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் பேசியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், புவனேஷ்வர் குமாரின் அனுபவம் மற்றும் ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான ஃபார்ம் போன்றவை அவரை இந்திய அணியில் மீண்டும் இடம்பெறச் செய்துள்ளதாக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வீரர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பது அணித் தேர்வுக்குழுவைப் பொறுத்தது. ஆனால், நான் எனக்குத் தோன்றுவதை கூற நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அணியில் நிறைய இளம் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. அந்தத் தொடரில் பும்ரா இல்லாததது எந்த அளவுக்கு நெருக்கடியாக இருந்தது என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். எப்போதும் வீரர்களின் அனுபவத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது.

இளம் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். அவர்கள் நன்றாக செயல்படுவதன் மூலம் அணியில் தேர்வாகிறார்கள். ஆனால், சில தருணங்களில் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது முக்கியம். அதன் காரணமாகவே, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார். அவர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக மிகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது முக்கியம் என்றார்.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக புவனேஷ்வர் குமார் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team's assistant coach has spoken about the reason behind fast bowler Bhuvneshwar Kumar's return to the squad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments