FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரப்பதம் வந்துவிட்டால் எல்லாமே கடினம்..! தோல்விக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியிருப்பதாவது...

அர்ஷ்தீப் சிங் உடன் ஷ்ரேயாஸ் ஐயர் - படம்: பிடிஐ
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “ஈரப்பதம் வந்துவிட்டால் பந்துவீச்சாளர்களுக்கு கடினம்” எனக் கூறியுள்ளார்.

இரண்டாவது டி20 கிரிக்கெட்டில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து வென்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தத் தோல்வி குறித்து இந்தியாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

ஈரப்பதம் வந்துவிட்டால் பந்துவீச்சாளர்களுக்கு கடினம். 249 ரன்களையும் கிட்டதட்ட 2 ஓவர்களுக்கு முன்பாக சேஸ் செய்திருக்கிறார்கள். இந்தக் களத்தில் தவறுகள் செய்வதற்கான சலுகை மிகவும் குறைவு. சிறிது தவறினாலும் பந்து திடலின் அரங்கத்திற்குள் சென்றுவிடுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். சில வாய்ப்புகளை தவறவிட்டோம். ஆனால், அதுதான் விளையாட்டு. சிறப்பாக பேட்டிங் செய்த எதிரணிக்கு வாழ்த்துகள்.

இந்தியாவில் அபிஷேக், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார்கள். மயங்க் யாதவும் சிறப்பாக பந்துவீசினார். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

summary

It becomes difficult when dew factor comes in: Shreyas Iyer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments