FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மாட் ரென்ஷா முறியடித்துள்ளார்.

11 அக்டோபர் 2026, 6:10 pm IST
மாட் ரென்ஷா - படம் | AP
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மாட் ரென்ஷா முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி ஒருபுறம் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாற, மறுமுனையில் அபாரமாக விளையாடிய மாட் ரென்ஷா 397 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை மாட் ரென்ஷா முறியடித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விராட் கோலி 171 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. அதனை தற்போது மாட் ரென்ஷா முறியடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மாட் ரென்ஷா முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ள 190 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Australian player Matt Renshaw has broken Virat Kohli's record in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments