கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி மானவ் சுதர் அபாரம்!
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மானவ் சுதர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மானவ் சுதர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடரில் ஹாம்ப்ஷைர் மற்றும் வார்விக்ஷைர் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் வார்விக்ஷைர் அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வார்விக்ஷைர் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 398 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஹாம்ப்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹாம்ப்ஷைர் அணி ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
Advertisement
Advertisement
இரண்டாவது இன்னிங்ஸில் ஹாம்ப்ஷைர் அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வார்விக்ஷைர் அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வார்விக்ஷைர் அணியில் விளையாடி வரும் மானவ் சுதர், இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றி அசத்தினார்.
Manav Suthar has impressed in the County Championship by displaying superb bowling and claiming 7 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.