புதிய மைல்கல்... சர்வதேச போட்டிகளில் சச்சினின் சாதனையை தகர்த்த ஜோ ரூட்!
சச்சினின் சாதனையை தகர்த்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பற்றி...
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட், இந்தியாவின் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையையும் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி ரிவர்சைட் கிரிக்கெட் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் பல்வேறு சாதனைகளைத் தகர்த்த ஜோ ரூட், ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனை ஒன்றை தகர்த்தார்.
Advertisement
Advertisement
அவர், சர்வதேச போட்டிகளில் 521 இன்னிங்ஸ்களில் 23,000 ரன்களை நிறைவுசெய்த 2-ஆவது அதிவேக வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் 522 இன்னிங்ஸ்களில் விளையாடி 23,000 ரன்களை எட்டியிருந்தார்.
முன்னாள் இந்திய கேப்டனும் நட்சத்திர ஆட்டக்காரருமாஅன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை அதிவேகமாக எட்டிய பேட்ஸ்மேன் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார். அவர் இந்தச் சாதனையை வெறும் 490 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிவேக 23,000 ரன்கள்
விராட் கோலி - 490 இன்னிங்ஸ்
ஜோ ரூட் -521 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் -522 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் -544 இன்னிங்ஸ்
ஜாக்ஸ் கல்லிஸ் -551 இன்னிங்ஸ்
குமார் சங்கக்காரா -568 இன்னிங்ஸ்
In these collection of pictures, we find out all about list of batters who are fastest to reach 23000 international runs with England's Joe Root joining the list on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.