ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 30) நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்க்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடர்கள் அனைத்திலும் தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் தொடர்களையும் தென்னாப்பிரிக்க அணியே வென்றுள்ளது. அதேபோல, இந்த கால இடைவெளியில் தென்னாப்பிரிக்க அணி விளையாடிய 26 ஒருநாள் போட்டிகளில் 20 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
The South African team has been dominating bilateral ODI series against Australia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.