ஐபிஎல்

சிஎஸ்கே பிளேஆஃப்புக்குத் தகுதி: சொன்னதை நிரூபித்த தோனி

கடந்த வருடம் சொன்னதை இம்முறை நிரூபித்துவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

DIN

கடந்த வருடம் சொன்னதை இம்முறை நிரூபித்துவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. சஹா 44 ரன்கள் எடுத்தார். ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும் பிராவோ 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு விளையாடிய சிஎஸ்கே, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்கும் தகுதி பெற்றது. கடந்த வருடம் முதல்முறையாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இம்முறை முதல் அணியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

வெற்றிக்குப் பிறகு தோனி கூறியதாவது:

பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது பெரிய விஷயம். கடந்த வருடம் பரிசளிப்பு விழாவில் நாங்கள் மீண்டும் முழு பலத்துடன் திரும்பி வருவோம் என்றேன். நாங்கள் அதற்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த வருடத் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டோம். அனைத்து வீரர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். எனவே வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்த வெற்றி உரியது. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். எப்போதும் ஜெயித்துக்கொண்டிருக்க முடியாது. எங்கள் தரப்பில் கடந்த முறை பல விஷயங்கள் சாதகமாக அமையவில்லை. சாக்குப்போக்குகள் சொல்லாதது முக்கியம். இந்தமுறை தவறுகளைச் சரிசெய்தோம். ஆரம்பத்திலிருந்து சிஎஸ்கே ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்தார்கள். எங்களுடைய ரசிகர்களை எண்ணி நாங்கள் எப்போதும் பெருமைப்படுவோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதநேயம், நீதி படுகொலை: தலித் இளைஞர் கொலைக்கு ராகுல் கண்டனம்!

உடல் பருமன் இருந்தால் மறதி ஏற்படுமா? - ஆய்வில் முக்கிய தகவல்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு! பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

முதல்வர் ஸ்டாலின் வருகை! கோவையில் போக்குவரத்து மாற்றம்!!

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT