தோனி மனைவி சாக்ஷி கர்ப்பம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2021 போட்டியை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. துபையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாகக் கைப்பற்றியது.
நேற்று போட்டி முடிவடைந்த பிறகு தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் மைதானத்துக்குள் வந்து தோனியுடனும் இதர கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினருடனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளதாகவும் 2022-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைத்தளங்களில் பலரும் இச்செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். எனினும் தோனி தரப்பிலிருந்து இத்தகவல் பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
2010-ல் சாக்ஷியைத் திருமணம் செய்துகொண்டார் தோனி. இத்தம்பதியருக்கு 2015-ல் ஸிவா என்கிற மகள் பிறந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.