ஐபிஎல்

சிஎஸ்கே - லக்னெள ஆட்டத்தில் சிக்ஸர் மழையை எதிர்பார்க்கலாமா?

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகளும் மும்பையில் இன்று  நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதவுள்ளன.

சிஎஸ்கே அணியில் சாண்ட்னருக்குப் பதிலாக மொயீன் அலி விளையாடவுள்ளார். மொயீன் அலியால் பவர்பிளேயிலும் பந்து வீச முடியும் என்பது சிஎஸ்கேவுக்குச் சாதகமாக அமையும். லக்னெள அணியில் இன்றும் ஹோல்டர் விளையாட மாட்டார். அடுத்த ஆட்டத்தில் தான் அணியில் இடம்பெறுவார். கடந்த ஆட்டத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் லக்னெள அணி விளையாடியது. 

அதிகமாக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் லக்னெள கேப்டன் கே.எல். ராகுல்லும் தோனியும் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் சிக்ஸர் மழை பொழியுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2018 முதல் ஐபிஎல் போட்டியில் கே.எல். ராகுல்லை விடவும் வேறு யாரும் அதிக சிக்ஸர் அடித்ததில்லை. 56 இன்னிங்ஸில் 110 சிக்ஸர்கள். 

அதேபோல 2018-லிருந்து 16 முதல் 20 ஓவர்கள் வரை அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களில் தோனி, பாண்டியாவுக்கே முதலிடம். தோனியும் பாண்டியாவும் தலா 51 சிக்ஸர் அடித்துள்ளார்கள். 

இதனால் இன்றைய ஆட்டத்தில் சிக்ஸர் மழை அடித்தால் அதில் ஆச்சர்யம் எதுவும் இருக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT