ஐபிஎல்

தோனியின் வினோத சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?

டாஸ் முடிவுகளில் 11 முறை தோற்றுள்ளார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்.  

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றாலும் டாஸ் முடிவுகளில் 11 முறை தோற்றுள்ளார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்.  

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. இந்த ஆட்டத்திலும் டாஸில் தோற்றார் சஞ்சு சாம்சன். 

ஐபிஎல் 2022 போட்டியில் சஞ்சு சாம்சனின் டாஸ் முடிவுகள் 

தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
வெற்றி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி
தோல்வி

சஞ்சு சாம்சன் இதில் எதுவும் சாதனை செய்துள்ளாரா என்று பார்த்தால் அவர் இன்னும் ஒரு டாஸில் தோற்கவேண்டியிருக்கிறது! அப்படிச் செய்தால் தோனியின் வினோத சாதனையை சமன் செய்துவிடுவார். 

ஐபிஎல் போட்டியில் ஒரு வருடத்தில் அதிகமுறை டாஸில் தோற்ற கேப்டன் - தோனி. 2012-ல் 12 டாஸ்களில் தோற்றுள்ளார். இதன்பிறகு 2008-ல் தோனியும் 2013-ல் கோலியும் தலா 11 முறை டாஸில் தோற்றுள்ளார்கள். அவர்களுடன் தற்போது இணைந்துள்ளார் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல்: ஒரு வருடத்தில் அதிகமுறை டாஸில் தோற்ற கேப்டன்கள்

தோனி - 12 முறை
தோனி, கோலி, சஞ்சு சாம்சன் - 11 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT