இவருடைய 10 நிமிட அறிவுரை எனது ஆட்டத்தை மாற்றியது: ரியான் பராக்
பிரபல வீரரின் அறிவுரை தனது ஆட்டத்தை சிறப்பாக மாற்றியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் அறிவுரை தனது ஆட்டத்தை சிறப்பாக மாற்றியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமாவுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது இரண்டாவது ஆண்டில், அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு மோசமானதாக அமைந்தது. எனது மோசமான ஃபார்மிலிருந்து எப்படி வெளியில் வருவது என விராட் கோலியிடம் கேட்டேன். இதுபோன்ற கடினமான சூழலில் இருந்தபோது நீங்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன்.
Advertisement
Advertisement
அவர் எனக்காக 10-15 நிமிடங்கள் ஒதுக்கி அவருடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார். அவரது அறிவுரைகள் உண்மையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என நினைக்கிறேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரியான் பராக் 318 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.