டுவைன் பிராவோ (கோப்புப்படம்)
டுவைன் பிராவோ (கோப்புப்படம்) 
ஐபிஎல்

சிஎஸ்கே-வின் வெற்றிக்கான ரகசியம் இதுதான்: டுவைன் பிராவோ

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன் உரிமையாளர்களிடமிருந்து எந்த ஒரு அழுத்தமும் தரப்படுவதில்லை என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக தொடர்ச்சியாக சிஎஸ்கே செயல்பட்டு வருகிறது. அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே, 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதன் உரிமையாளர்களிடமிருந்தும் அல்லது வெளியிலிருந்தும் எந்த ஒரு அழுத்தமும் தரப்படுவதில்லை என சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளியிலிருந்து யாருடைய தலையீடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. அதேபோல உரிமையாளர்களும் வீரர்களுக்கு எந்த ஒரு அழுத்தத்தையும் தருவதில்லை. வீரர்கள் அவர்களாக இருப்பதற்கு அணி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. சென்னை அணியின் சிறப்பே அதுதான் என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT