வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!
வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும்..
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரிக்கப்பட்டு இன்றிரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படுமென சர்வதேச விளையாட்டு நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்த நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை ஆக. 13 மாலை 6 மணி வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கான விடை தெரிய செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement